இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை முதல் ஓவரின் முதல் பந்திலே புவனேஷ்குமார் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன்மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டத்தின் முதல் ஓவரிலே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார். இதற்கு முன்பு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த டேவிட் வில்லியை பின்னுக்குத் தள்ளி புவனேஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.
முதலிடத்தில் இந்தியாவின் புவனேஷ்குமாரும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தில் டேவிட் வில்லி 13 விக்கெட்டுகளுடனும், இலங்கையின் மேத்யூஸ் 11 விக்கெட்டுகளுடனும், நியூசிலாந்தின் டிம் சவுதி மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் தலா 9 விக்கெட்டுகளுடனும் 4வது இடத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க : India vs England 2nd T20 : புவி ஸ்விங்.. கேப்டன்சியில் ரோகித் கிங்... 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் புவனேஷ்குமார் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவர் மெய்டன் ஆகும். நீண்ட இடைவேளைக்கு பிறகு புவனேஷ்குமார் தனது ஸ்விங்கில் மிரட்டினார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்குமார் 68 டி20 போட்டிகளில் ஆடி 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டி20 போட்டியில் ஒரே போட்டியில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் கைப்பற்றியுள்ளார். புவனேஷ்குமார் தன்னுடைய அறிமுக போட்டியிலே முதல் ஓவரின் முதல் பந்திலே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Dhoni In England: இங்கிலாந்திற்கு சென்று இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய தோனி..!
மேலும் படிக்க : Rohit Sharma Record: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்