நடிகை, தயாரிப்பாளர் என்று தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் தனக்கென தனித்துவமான ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார் ராதிகா சரத்குமார்.


அவர் அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளுக்கு மகள் ரயானே மிதுன் ஒரு பரிசைக் கொடுத்துள்ளார். ராதிகா வெகு நாட்களாக பச்சை நிற ரா மேங்கோ சேலை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான். அவர் எங்கள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வார். அவருக்காக எதையும் செய்யமாட்டார். அதனால் தான் அவருக்காக நான் இதை வாங்கினேன் என்று கூறியுள்ளார். மேலும், அம்மா நீங்கள் ஆசைப்படும் எல்லாமே கிடைப்பெற தகுதியானவர் நீங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






ராதிகாவின் திரைப் பயணம்:


1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை ராதிகா. இவர் எம்.ஆர்.ராதாவின் மகள். ராதாரவி, நிரோஒஷா ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். ராதிகா, மீண்டும் ஒரு காதல் கதை (1985) என்ற படத்தை முதன்முதலில் தயாரித்தார். இந்த திரைப்படம் இந்திரா காந்தி விருதை வென்றது. படத்தில் நடித்த பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.


வெளிநாட்டவரான ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிறந்தவர் தான் ரயான் என்ற பெண் குழந்தை. பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். கடைசியாக அவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் பிள்ளை உள்ளார்.




 


நியாயம் காவலி (1981) படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகை, தர்ம தேவதை (1986), நீதிக்கு தண்டனை (1987) மற்றும் கேளடி கண்மணி ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை வென்றுள்ளார். அவர் இடி கதா காடு (தெலுங்கு), அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமாய், வாணி ராணி, தாமரை மற்றும் சித்தி போன்ற தொடர்களைத் தயாரித்து உள்ளார். ராதிகா ஒரு தேசிய விருதுகள் (தயாரிப்பாளர் பிரிவில்), 6 - பிலிம்பேர் விருதுகள் தெற்கு, 3 - தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 1 - சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் 1 - நந்தி விருதுகளை வென்றுள்ளார்.