72வது குடியரசு தின விழாவையொட்டி, 2020 ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகளில் 18 பேர் சேர்ந்து தேசிய கீதம் பாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
2020 ஒலிம்பிக், பாராலிம்பிக் சர்வதேச விளையாட்டு தொடர்களில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியது. அத்துடன் இதற்கு முன்பாக 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்று இருந்த 6 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையை படைத்தது. பாராலிம்பிக்கை பொருத்தவரை, மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24வது இடத்தில் இந்தியா நிறைவு செய்தது.
வீடியோவை காண:
நீரஜ் சோப்ரா, ரவி தாஹியா, மிராபாய் சானு, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுமித் அண்டில், மணிஷ் நார்வால், ப்ரமோத் பகத், கிருஷ்ண நாகர், பவினா பட்டேல், நிஷாத் குமார், யோகேஷ் கத்துனியா, தேவேந்திர ஜஜாரியா, பிரவீன் குமார், சுஹாஸ் யத்திராஜ்,ஷரத் குமார், ஹவிந்தர் சிங், மனோக் சர்கார் உள்ளிட்ட 18 வீரர் வீராங்கனைகள் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடியுள்ளனர். வெள்ளை நிற உடையில், ஒற்றுமையையும், இந்திய நாட்டின் பெருமையையும் நிலைநாட்டும் வகையில் உணர்ச்சி பொங்க அவர் பாடியுள்ள இந்த தேசிய கீத பாடல், விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஐஐஎஸ்எம் எனப்படும் இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இந்த வீடியோவை தயாரித்திருக்கிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்