பிரிஸ்பேனில் கபா மைதானாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி அசத்தினார். மேலும், 369  என்ற ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ரன் துரத்திய இந்தியா ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பரிகொடுத்தது. 


அந்த இக்கட்டான சூழலில், ஷர்துல் தாக்கூர் மற்றும் வாசிங்க்டன் சுந்தர் கூட்டு சேர்ந்த  123 ரன் சேர்த்தனர். இதன் காரணமாக, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில்  336 ரன் சேர்த்தது. வாசிங்டன் சுந்தர்  62 ரன் சேர்த்தார்.  ஆஸ்திரேலியா  இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்  எடுத்திருந்தது. இதனையடுத்து,  328 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய  இந்தியா இறுதி நாளன்று வெற்றி வெற்றியை அடைந்தது. கடந்த 32 ஆண்டுகளாக  கபா மைதானாத்தில் தோல்வியை சந்தித்திராத  ஆஸ்திரேலியா அணி  ஜனவரி 19ம் தேதியன்று இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.   


 






  


இந்நிலையில், வாசிங்கடன் சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நான்கு கால் நண்பரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதில், “காதல் என்பது நான்கு கால் கொண்ட சொல். உலகமே, கபாவை சந்தியுங்கள்! ” என்றும் பதிவிட்டார்.  வாசிங்க்டனின் இந்த பதிவுக்கு சிலர் பாராட்டும் பலர் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். சுந்தரின் இந்த பதிவு மிகவும் அர்த்தமற்றது. உங்கள் எதிரணியையும், எதிரணி மைதானங்களையும் மதியுங்கள் என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.          


மிக இளவயதில் இந்திய அணிக்காகப் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தவர் வாசிங்க்டன் சுந்தர். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.