மஹிந்திரா நிறுவனம் பரிசாக் அளித்த காருக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து தனதுட்விட்டரில் பதிவிட்ட அவர், "இந்த நேரத்தில் வார்த்தைகள் என்னை ஏமாற்றி விடுகின்றன. உங்கள் அழகான பரிசைப் (மஹிந்திரா தார் ) பற்றிய உணர்வை சொல்லவோ வெளிப்படுத்தவோ என்னிடம் எதுவும் இல்லை. இப்போதைக்கு, என்னுடைய முழுமையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் விளையாடிய அறிமுக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், சிராஜ் ஆகியோரை கவுரப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் பரிசாக வழங்கப்படும் என்று அதன் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
முன்னதாக, நான்கவாது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கும் மஹிந்திரா தார் வாகனம் பரிசளிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அந்த காரை தனது பயிற்சியாளருக்கு அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜ் 2017 இல், நியூசிலாந்துக்கு எதிரான இருபது20தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். 4 நவம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். டெஸ்ட் போட்டியில் சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் முகமது சிராஜ் களமிறக்கப்பட்டார். கபா மைதானத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.