கிரிக்கெட் மைதானங்களில் பெரும்பாலம் ரசிகர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு உள்ளே வந்து தங்களுடைய வீரர்களிடம் கை கொடுப்பது அல்லது காலில் விழுவது போன்ற காரியங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. அவ்வப்போது சில பறவைகளும் கிரிக்கெட் மைதானங்களுக்குள் வந்து சில சமயங்கள் பந்துகளால் அடிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இதற்கு சற்று மாறாக ஒரு கிரிக்கெட் போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. 


அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான உள்ளூர் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று பியர்டி மற்றும் சிஎன்எஸ்ஐ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎன்.எஸ்.ஐ அணியின் பேட்டிங்கின் போது 9ஆவது ஓவரில் நாய் ஒன்று பாதியில் நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது. அந்த நேரத்தில் பந்தை வீக்கெட் கீப்பர் ஸ்டெம்பை நோக்கி வீசினார். அந்தப் பந்தை மைதானத்திற்குள் நுழைந்த நாய் சிறப்பாக தன்னுடைய வாயால் கவ்வியது. 


 






அதன்பின்னர் அந்த நாயிடம் இருந்து பந்தை எடுக்க வீராங்கனைகள் சிறிது நேரம் முயற்சி செய்தனர். இறுதியில் அந்த நாய் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீராங்கனையிடம் சென்று தனது வாயில் இருந்த பந்தை கீழே கொடுத்தது. அதன்பின்னர் மீண்டும் அந்த நாய் வெளியே அனுப்பப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. 


 






அந்தப் பதிவில் மைதானத்திற்கு வந்து சிறப்பாக ஃபில்டிங் செய்த நபர் என்று கூறியுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 2 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். மேலும் பலரும் இந்த நாயின் செயல் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்த நாயின் செயலை பார்த்து பலரும் ரசித்து வியந்து வருகின்றனர். அத்துடன் இவரை மாதிரி ஒரு பயிற்சியாளர் தான் நமக்கு தேவை என்று கூறு வருகின்றனர். 


மேலும் படிக்க: அமெரிக்க ஓப்பன் கிராண்ட்ஸ்லாமை வென்ற 18 வயது எம்மா ரடுகானு - யார் இவர்?