திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகின்றன. மேலும் நேற்று ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு பிரியாதர்ஷினி என்ற மனைவியும் லோசினி என்ற 10வயது மகளும் சரண் 14 வயது மகன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலுக்கு சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளன இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
இதில் மேல்சிகிச்சைக்காக, வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த் சரண் பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் குழந்தை லோசினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த உணவகத்தில் உணவு சாப்பிட 31 நபர்களும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் சமயல் மாஸ்டர் உள்ளிடோரை காவல்துறையினர் கைது செய்து 3 வழக்கு கீழ் அவர்கள் மீது பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் "முருகேஷ்"ABP NADU குழுமத்திற்கு கொடுத்த பிரத்தேயக பேட்டியில் அவர் கூறுகையில்;
ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் 7 குடும்பத்தினர் உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக அசைவ உணகத்திற்கு சீல் வைக்கப்பட்டு ஓட்டல் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமான உணவகத்திலிருந்து உணவு சேகரித்து ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த கடைகயில் பிரியாணிக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் பரிசோதனை செய்யவும், ஆரணி நகராட்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து 13ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வறிக்கையை அடுத்த வாரத்திற்குள் நிறைவடைந்து விடும். இந்த ஆய்வில் தவறுகள் கண்டறியப்பட்டால் கண்டிப்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்திற்கு அளவிற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மிகவும் கவனமாகவும், சுகாதரமாகவும், தரமாகவும் தயாரிக்க வேண்டும். இதனை பின்பற்றவில்லை என்றாலும் நடவடிக்ககை எடுக்கப்படும். மேலும் ஆரணி அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட காரணம் என்ன என்பது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும்.