விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ரோசனை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டில்லி (50) என்பவர் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெங்கடேசனின் மனைவி டில்லி வழக்கம் போல் திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்றுவிட்டார், இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வெங்கடேசன் இருந்துள்ளார்.
வெங்கடேசன் வசிக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் குழந்தைகள் விடுமுறை தினம் என்பதனால் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். வீட்டிலிருந்து வெளியே வந்த வெங்கடேசன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார், சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த வெங்கடேசன் வீட்டில் திண்பண்டம் வைத்திருப்பதாகக் கூறி அழைத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கடேசன் சிறுமியை வீட்டில் டிவி பார்க்கலாம் என கூறி திண்பண்டத்தை சிறுமியின் கையில் கொடுத்து விட்டு சிறுமியை அருகில் உட்கார வைத்து சிறிது நேரம் டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் வெங்கடேசன் பாலியல் உணர்வுடன் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி சிறிது நேரத்தில் கதறி அழுது கொண்டு வெங்கடேசனின் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி வீட்டிலிருந்த தந்தையிடம் கதறி அழுது தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
Sri Lanka Crisis: இலங்கையில் கிடுகிடு விலை உயர்வு.. உணவுப் பஞ்சம்..தவிக்கும் மக்கள்.. Detail report!
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வெங்கடேசனை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்து பொழுது வெங்கடேசன் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதரில் மறைந்து கொண்டார் போலீசார் சுற்றி வளைத்து வெங்கடேசனை கைது செய்தனர்.
வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை டிவி பார்ப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளிடம் யாரேனும் தவறுதலாக ஈடுபட்டால் உடனடியாக காவல் நிலைய 9498100497 எண்ணிற்கு தொடர்பு கொண்டு விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என மகளிர் காவல் நிலைய காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Vadivelu Press Meet : எனக்கு எண்டே கிடையாது.. வடிவேலு பகிரங்க பேட்டி