இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர் சிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கிரிக்கெட் கலத்தில் ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். அப்போது அவரின் ஃபேவரைட் ஷாட் ஆன ஹெலிகாப்டரை ஒரு போட்டியில் அடித்தார். அது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாள் தோனியை களத்தில் காண முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. 


இந்நிலையில் தோனியின் அந்த ஹெலிகாப்டரை ஷாட்டை ஒரு சிறுவன் அப்படியே அடிக்கும் வீடியோ ஒன்றை முன்னாள் ஆகாஷ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அச்சிறுவன் அசத்தலாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை தோனியை போல் அடிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ கிட்டத்தட்ட 52 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். 


 






தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை இதற்கு முன்பாக ஒரு சிறுமி அடித்திருந்தார். அந்த வீடியோவையும் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவிட்டிருந்தார். அப்போது அந்த வீடியோ சுமார் 2 லட்சம் பேர் பார்த்தனர். அத்துடன் 51 ஆயிரம் லைக்ஸும் கிடைத்தது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் ஒரு சிறுவன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்துள்ள வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாகி வருகிறது. 


 






2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் சற்று கவலையுடன் இருந்தனர். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் யுஏஇயில் நடைபெற உள்ளது. ஆகவே எஞ்சிய போட்டிகளிலும் சென்னை சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க:  Ruthuraj Gaikwad On Dhoni: ”ஒருவருக்குக்கூட தோனி ஓய்வு அறிவிப்பு குறித்து தெரியாது” - மனம் திறந்த ருத்துராஜ் கைக்வாட்..!