டோக்கியோ பாராலிம்பிக் தொடர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். போட்டி தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த யோகேஷ், போட்டி முடிவில் இரண்டாம் இடத்தில் நிறைவு செய்துள்ளார். வட்டு எறிதல் உலக தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர், இந்தியாவுக்கு இப்போது நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 


கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில், கடைசி வாய்ப்பில் 44.38 மீட்டர் தூரம் வீசினார்.  இந்த போட்டியில் அவர் வீசியதில்  இதுவே சிறந்த த்ரோவாக எடுத்து கொள்ளப்பட்டது. இது அவருடைய பெஸ்ட் த்ரோவாகும். தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்த அவர், ப்ரேசில் வீரர் பட்டிஸ்டா வந்து 44.92 மீட்டர் தூரம் வீசி முதல் இடத்தை பிடித்தார். 


தனக்கு எட்டு வயதில் ஏற்பட்ட உடல் பாதிப்பால் முடங்கி நிற்காமல், விளையாட்டுகளில் கவனம் செலுத்திய அவர், தனது ஒலிம்பிக் கனவை வென்று காட்டியுள்ளார். பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வகையில், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் எஃப்-56 பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


முன்னதாக, பாராலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இந்திய அணி அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக  4 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் சீன வீராங்கனை ஷியோ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் அவர் தோற்றிருந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது. 






அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டியில், இதில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகிவிட்டது. 


Also Read: ப்ளாஷ்பேக்: கடைசி நேரத்தில் விலகிய வசந்த்... இன்ஸ்டண்ட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா:அமிதாப் தயவில் ‛அண்ணாமலை‛!