நமக்கு வரும் வருமானத்தில், பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு என அழைக்கப்படுகிறது. அதாவது, தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தாமல் எதிர்கால பயன்பாட்டுக்கு ஒதுக்கி வைக்கப்படுவதாக இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் நாம் அனைவரும் சேமிப்பின் அவசியத்தை நன்றாக உணர்ந்திருக்கிறோம்.


நாம் நிதி ரீதியாக தனித்து இயங்குவதற்கும், எதிர்பாராத செலவுகளில் சமாளிப்பதற்கும், வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலையிலும், விருப்பப்பட்ட பணிக்காக காத்திருப்பதற்கும்  சேமிப்புப் பணம் முக்கியமானதாகப்படுகிறது. மேலும், பணி ஓய்வில் நமது வாழ்க்கைப் பாதுகாப்பாய் அமைய, இன்றைய சேமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.    


Lalithaa Jewellery கொரோனாவிற்கு பிந்தைய வாழ்கையில் சேமிப்பு பழக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும்  இன்றியமையாததாகி விட்டது. 


வங்கிகளில் வெவ்வேறு வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம். இருப்பினும், தங்கம் வெறும் ஆபரணத்திற்காக மட்டுமின்றி, சேமிப்புக்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. 




மாற்றம் என்பது, ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ நிகழாது. நமது நிதிநிலையில் சிறிய மாற்றம் ஏற்படுவதற்கு நாம்தான் அனைத்து வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இன்று முதல், நாம் நமது பணத்தை சேமிக்கத் தொடங்கினால்,அது எதிர்காலத்தில் மிகப்பெரிய  மாற்றங்களை ஏற்படுத்தும். 


தங்கத்தில் சேமிக்கலாம்:     


தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கத்திற்கான மூலப்பொருள் இந்தியாவில் இல்லை. முற்றிலும் இறக்குமதியை சார்ந்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை போன்றவற்றின் அடிப்படையிலும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் அநேக மக்கள் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.   


இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.


அதாவது, பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர் என்ற அய்யன் வள்ளுவன் கூற்றுக்கு இணங்க சேமிப்பின் நன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


தங்கநகை முன்பதிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை தி.நகர் லலிதா ஜூவல்லரி.


இதன்படி ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் தவணைத்தொகை, அன்றைய தேதியின் மதிப்பில் 22 காரட் தங்கமாக வரவு வைக்கப்படும். 
சுலபத் தவணையாக மாதாந்திரமாகக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிக பட்சம் 10000 ரூபாய் வரை செலுத்தலாம்.  செலுத்தக்கூடிய தவணைகள் ரூ.1000 / ரூ.1500 / ரூ.2000 / ரூ.2500 / ரூ.5000 / ரூ.10000 வரை பணம் செலுத்தலாம். 


வாடிக்கையாளர்கள் 11 மாதங்கள் கழித்து நகையை வாங்கிக் கொள்வார்களானால், எந்த தங்க நகைக்கும் சேதாரம் (V.A.) அறவே இல்லை. வெறும் அரை சதவிகித (0.5%) சேதாரம் மட்டும் உங்கள் பழைய தங்கத்தை உருக்குவதற்கும், தூய்மைப்படுத்துவதற்கும் மட்டும் கழித்துக் கொள்ளப்படும். பழைய நகைகள் BIS 916 ஹால்மார்க் தர நிர்ணயத்தின் அடிப்படையில்- மதிப்பிடப்படும். ஐந்தாவது மாத முடிவிலிருந்து, வாங்கும் நகையைப் பொருத்து, சேதாரமே (V.A.) இல்லாமல் வாடிக்கையாளர் நகை வாங்கிக் கொள்ளலாம். பழைய நகைக்கு பதிலாக பணம் செலுத்தியும், இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.


வீடியோவில் விபரம் அறியலாம்: