தெற்கு கலிபோர்னியில் சிங்கம் அதிகமாக காணப்படும். அங்குள்ள மக்களை அடிக்கடி அச்சுறுத்தி வரும் 30 கிலோ எடை உடைய மலை சிங்கத்தை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி அந்த சிங்கம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த சிங்கத்தை பிடிக்க, கொலை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.


இந்நிலையில்கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த ஐந்து வயது சிறுவனை அந்த சிங்கம் கடுமையாக தாக்கியுள்ளது. வீட்டு வாசலில் இருந்து அந்த சிறுவனை சுமார் 45 மீட்டர் வரை இழுத்து சென்று வேட்டையாட தயாரானது. அப்போது அந்த சிறுவனனின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் இருந்த அவரது தயார் அதிர்ச்சியடைந்தார். உடனே தனது மகனை எப்படியாவது சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என நோக்கத்தில் பதறியடித்து சிங்கத்தை நோக்கி ஓடினார். வாயில் தனது குழந்தையின் தலையை பிடித்து வைத்திருந்த சிங்கத்திடம் இருந்து குழந்தையை போராடி மீட்டார். 


இதனையடுத்து அச்சிறுவனின் பெற்றோர் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை சிரான நிலமையில் இருப்பதாக உறுதி அளித்தனர்.பிறகு இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது, இந்த சிங்கம் சமீப காலமாக அதே பகுதியில் உலா வந்தது தெரிய வந்தது.






அது மட்டுமின்றி சிங்கம் அந்த சிறுவனின் வீடு அருகே அடிக்கடி வந்து சென்றது உறுதியானது. குழந்தையை வேட்டையாடிய இந்த சிங்கத்தை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். அதே போல் அந்த சிறுவனின் டிஎன்ஏ சோதனை மேற்கொண்ட முடிவில் குழந்தையைத் தாக்கியதற்கு சிங்கம் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. 


இதனையடுத்து மக்களின் கோரிக்கையும், பாதுகாப்பையும் ஏற்று வனவிலங்கு துறை அதிகாரிகள் மலை சிங்கத்தை சுட்டுக் கொலை செய்தனர். இந்த சிங்கம் தவிர தெற்கு கலிபோர்னியாவில் மற்றோரு சிங்கம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கண்டு பிடிக்கவும் வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். ஐந்து வயது சிறுவனை மலை சிங்கம் அடித்து கொன்று உண்ண நினைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.