தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் சந்தித்தார்.


அப்போது, 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வென்றதை குறிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப்பரிசனை அவரிடம் ஸ்ரீகாந்த் வழங்கினார். அவரிடம் இருந்து அந்த நினைவுப் பரிசை முதல்வர் ஸ்டாலின் புன்னகையுடன் பெற்றுக் கொண்டார். 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.


அந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் இடம்பெற்றன. அந்தத் தொடர் தான் ஜிம்பாப்வே அணிக்கு முதல் உலகக் கோப்பை தொடர் ஆகும். 1975 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ரன்னர்-அப் ஆனது.


இதையடுத்து 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சாம்பியன் ஆனது. அந்தத் தொடரின் பைனலில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


மூன்றாவது உலகக் கோப்பை


மூன்றாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரும் இங்கிலாந்தில் தான் நடந்தது. அந்தத் தொடரின் ஃபைனலில் இந்திய அணி 43 ரன்கள் வித்திாயசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. சாம்பியன் ஆன இந்திய அணியில் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார்.






அமர்நாத் துணை கேப்டனாக இருந்தார். கிர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சுனில் கவாஸ்கர், விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, மதன் லால், சந்தீப் பாட்டீல், பல்வீந்தர் சாந்து, யஷ்பால் சர்மா, ரவி சாஸ்திரி,  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுனில் வால்சன், திலீப் வங்சர்கார் ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் விளையாடியது. 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 183 ரன்கள் எடுத்தது.


ஒரே ஒரு தமிழர்


அந்த ஆட்டத்தில் இடம்பெற்ற ஒரே தமிழரான ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார்.  இதுதான் பைனலில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அவருக்கு அடுத்தபடியாக சந்தீப் பாட்டீல் 27 ரன்களும், அமர்நாத் 26 ரன்களும் அடித்தனர்.


Ruturaj Gaikwad: 7 சிக்ஸர்களுடன் ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்த சாதனைகள்..!


ஸ்ரீகாந்த் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 38 ரன்கள் விளாசினர். 1983-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி ஏந்தி சாதித்தது.


இரு முறை தொடர்ச்சியாக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியது மிகப் பெரிய சாதனையாக இன்று வரை கருதப்பட்டு வருகிறது.