அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்திலின் படிப்புக்கு அமுதா கல்லூரி முதல்வரிடம் சவால் விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 






இன்றைய எபிசோடில் உமா கல்லூரி முதல்வரிடம் சிதம்பரத்தோட மருமகன் செந்தில் இந்த காலேஜுக்கு படிக்க வர்றாரு, அவருக்கு எந்த பிரச்சனை இல்லாம பார்த்துக்கோங்க, 5 வருஷம் கழிச்சி காலேஜூக்கு படிக்க வர்றதுனால, அவருக்கு தகுதி இல்ல அப்படி இப்படின்னு சொன்னீங்க நடக்குறது வேற, வேணும்னா பணம் தர்றேன் வாங்கிக்கோங்க என மிரட்டுகிறார்.  அதை கேட்டு கோபமான முதல்வர் தகுதி இல்லாத ஒருத்தனுக்கு தாளாளர் சீட்டு கொடுத்துட்டாரு...போனா போகுதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுறீங்க..என கடுப்பாகிறார்


மேலும் செந்திலுக்கு தகுதி இல்லேன்னு சொல்லி இப்பவே மேனேஜ்மெண்டுக்கு லெட்டர் அனுப்புறேன். அதை யார் தடுக்குறாங்கன்னு பார்க்கலாம் என கூற  உமா மிரட்டும் தொனியில் மீண்டும் பேசுகிறாள். இதனால் செந்தில் படிப்பதில் என்ன பிரச்சனையாக போகிறது என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது. இதனையடுத்து அமுதா மாவு அரைத்துக் கொண்டிருக்க, காலேஜில் இருந்து லெட்டர் வருகிறது.


அதைப் படித்த செந்தில் அதிர்ச்சியடைகிறார். அவரை பார்த்த அமுதா என்னவென்று கேட்க சொல்லாமல் மறைக்கிறார். ஆனால் அமுதா கோபத்துடன் மீண்டும் கேட்க, செந்தில் காலேஜ் லெட்டர் பற்றி சொல்கிறான். உடனே அமுதா மாவு அரைப்பதை பாதியில் நிறுத்தி விட்டு கல்லூரிக்கு கிளம்புகிறார்.  அப்போது பரமு மாவு அரைக்கிறதை பாதில விட்டுட்டு போறீங்க என கேட்க, நான் விட்டுட்டு போனா நீங்க பண்ண மாட்டீங்களா என அமுதா கேட்டுவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார்.


அவர் கல்லூரி முதல்வரை சந்தித்த நிலையில் செந்திலுக்கு காலேஜ் படிக்க சீட் தர முடியாது என சொல்ல அமுதாவுக்கு கோபம் ஏற்பட்டு அவரது சட்டையை பிடிக்கிறார். என்ன பண்ணுன்னா சீட் தருவீங்க என கேக்க, கல்லூரி முதல்வr செந்திலின் சட்டையை பிடித்து இழுத்து வகுப்பறைக்கு செல்கிறார். அங்கு  கேள்விதாளை நீட்டி அதற்கு பதில் எழுத சொல்ல செந்தில் எழுத முடியாமல் தடுமாறுகிறார்.


உடனே அமுதா  முதல்வரிடம் 5 வருஷம் படிக்காம இருந்து இப்ப பரீட்சை வச்சா உங்களாலயே பாஸ் பண்ண முடியாது. எல்லாத்துக்கும் நியாயமா நேரம் குடுக்கனும் என சொல்ல, ஃபீஸ் கட்டும் நாள் வரை பரீட்சைக்கு படிக்க நேரம் கொடுக்கிறார். இந்த எக்ஸாம்ல பாஸ் பண்ணலேன்னா கண்டிப்பா சீட் கிடையாது என உறுதியாக கூறுகிறார். அமுதா அவரிடம் செந்தில் கண்டிப்பாக பாஸ் செய்து விடுவான் என சேலஞ்ச் விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.