ப்ரோ கபடி லீக்:


10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறதுஇந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ்பெங்களூரு புல்ஸ்தபாங் டெல்லிகுஜராத் ஜெயன்ட்ஸ்ஹரியானா ஸ்டீலர்ஸ்ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்பாட்னா பைரேட்ஸ்புனேரி பால்டன்தமிழ் தலைவாஸ்தெலுங்கு டைட்டன்ஸ்யு மும்பை மற்றும் உ.பியோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.


இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது


தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் மைனஸ் 14ஆக குறைந்துள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது


தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது.


பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?


பெங்களூரு புல்ஸ் அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல், 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு புல்ஸ் அணி கடைசியாக தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் விளையாடியது. இந்த போட்டியில் 42-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.


முன்னதாக, பெங்களூரு புல்ஸ் அணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி. இச்சூழலில் தான் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


மேலும் படிக்க: IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்


மேலும் படிக்க: Dhruv Jurel: "துருவ் ஜூரேல் மேட்ச் வின்னர்" இந்திய இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய சங்ககரா!