இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறதுமுன்னதாக, முதல் டி20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறும் 2 வது போட்டியில் விளையாட இருக்கிறது.


இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியாஇங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர்.


குற்றச்சாட்டு வைக்க மாட்டோம்:


இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் இந்திய மைதானங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் அதுகுறித்து நாங்கள் எந்த குற்றச்சாட்டும் வைக்கமாட்டோம். இங்கிலாந்தில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக தயார் செய்யப்படுகிறது. அதுபோல இந்தியாவும் தங்கள் மைதானத்தை சுழற்பந்துகளுக்கு ஏற்றார் போல் தயார் செய்வதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லைஎன்று கூறியுள்ளார்.


முன்னதாக டெஸ்ட் அணிக்கு அறிவிக்கப்பட்ட இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:


இந்திய அணி:


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.


இங்கிலாந்து அணி:


பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ரோப் , ஜோ ரூட், மார்க் வூட்.


மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்... வீடியோ உள்ளே!


 


மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!