கஜகஸ்தானில் நடைபெற்ற 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பின்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு திரும்பிய  விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கடந்த 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கஜ்கஸ்தானில் 10-வது ஆசிய உள்ளரங்க தடகள் சாம்பின்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பதக்கம் வென்ற ஜெஸ்வின், பிரவீன், சித்தரவேல், பவித்ரா மற்றும் ரோசிமீனா ஆகியோருக்கு விமான நிலையத்தில் மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி வரவேற்றனர். 


10-வது ஆசிய உள்ளரங்க தடகள் சாம்பின்ஷிப் போட்டிகள் :


இந்தப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களின் விவரம். தமிழ்நாடு வீரர்கள் பல புதிய சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளனர். மகளிர் போல்ட்வால்ட் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரோசி மீனா 3.90 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும், பவித்ரா வெங்கடேஷ் 4 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் குண்டு எறிதல் பிரிவில் தேஜிந்தர்சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். கரண்வீர்சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்கள் ட்ரிபிள்ஜம்ப் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.


அதேபோல, பெண்களுக்கான பெண்டத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் தேசிய அளவில் 4119 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


 நீளம் தாண்டுதலில், தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். அதன்படி, போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில், அவர் 7.97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.




மேலும் வாசிக்க. 


Viral Video: கிடைக்கும் பந்துகளை பிளக்கும் எட்டு வயது சிறுமி.. ஷேர் செய்து ஆச்சரியப்பட்ட சச்சின்.. வைரலாகும் வீடியோ..


IND vs AUS:ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி.. மீண்டும் ஒரு அரிய சாதனையை படைக்கவிருக்கும் அஷ்வின்..!