பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17 ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டுவார். 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி மூன்று நாட்களில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் அஸ்வின் அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தி பல சாதனைகளை படைத்தார். அஸ்வின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் என மொத்தம் எட்டு விக்கெட்களை வீழ்த்தினார். 


இந்தநிலையில், பிப்ரவரி 17 முதல் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 100 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டுவார்.


அனில் கும்ப்ளேவுக்கு பிரகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் ஆவார். 






அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 டெஸ்ட் போட்டிகளில் 38 இன்னிங்ஸ்களில் 111 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்த படியாக அஸ்வின், 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் 95 விக்கெட்களை வீழ்த்தி ஹர்பஜன்சிங் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. 


ஒட்டுமொத்தமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் முதலிடத்தில் உள்ளார். போதம் ஆஸ்திரேலியாவிக்கு எதிராக 36 டெஸ்ட் போட்டிகளில் 66 இன்னிங்ஸில் 148 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்.


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்