இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென்று கேட்டால் கிரிக்கெட் என்று சொல்லும் அளவிற்கு அதன் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பல ஆண்டுகளாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய பெரிய மைதானங்கள் முதல் தெருக்கள் வரை கிரிக்கெட் மோகம் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில், கிரிக்கெட் விளையாடுவதில் பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல. சமீபத்தில் பெண்கள் பிரிமியம் லீக் ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள். மகளிர் பிரீமியர் லீக் கடந்து ராஜஸ்தான் கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட்டில் பொளந்துகட்டும் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு மைதானத்தில் தன் வயது சக சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அபாரமான பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார்.
இந்த வீடியோவில் வைரலாகும் அந்த சிறுமியின் பெயர்முமல் மெஹர். இவருக்கு 14 வயதுதான் ஆகிறது. இந்த சிறுமி சுப்மன் கில் போல் வேகமாகவும், சூர்ய குமார் யாதவ் போன்று 360 டிகிரி ஷாட்களையும் அடித்து அசத்துகிறார். அதிரடியான பேட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் பகிர்ந்துள்ளார் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
யார் இந்த முமல் மெஹர்?
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர் முமல் மெஹர். இது ஒரு சிறிய கிராமம். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். வெறும் 34 வினாடிகள் பேட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார். மூமல் கிராமத்தில் உள்ள தனது வயது சிறுவர்களுடன் தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் கிரிக்கெட் விளையாடுவார். மூமல் மெஹர் எட்டாம் வகுப்பு மாணவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிரும் போது அது வைரலாகி வருகிறது. முமல் மெஹர் கடந்த ஜனவரி 31 ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர். முமல் மெஹர் ஒவ்வொரு பந்திலும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பதை தொடர்ந்து பந்துவீச்சிலும் கலக்கி வருகிறார்.