டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி விவரத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.
டி-20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை அணி விவரம்:
தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப் மஹேஷ் , பிரவீன் ஜெயவிக்ரம.
ரிசர்வ் வீரர்கள்: லஹிரு குமாரா, புலினா தரங்கா, பினுரா பெர்னாண்டோ, அகிலா தனஞ்செயா.
இந்த அணி விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்வாளர்கள், தினேஷ் சந்திமால் மற்றும் குசல் பெரேரா போன்ற மூத்த வீரர்களை இந்த அணியில் சேர்த்துள்ளனர். அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தெக்ஷனா வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அணியில் வேகப்பந்து வீச்சை நுவான் பிரதீப் வழிநடத்துகிறார். கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக அணிகள் நான்கு தனித்தனி வீரர்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த அணி லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோட், அகிலா தனஞ்செயா மற்றும் புலினா தரங்கா ஆகியோரை ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்துள்ளது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு இலங்கை டி 20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.