ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டது. 

டி-20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன்,ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,  ராகுல் சஹர், ரவிசந்திரன் அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்கிரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், 

பேக்-அப் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சஹர்

Also Read: Dhoni in T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் ‛தல’ தோனி... டி20 அணிக்கு ஆலோசகராக நியமனம்!

சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.

சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.

இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 

க்ரூப்:  ஏ இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா

க்ரூப்: பி வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.

இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், பி1 மற்றும் ஏ2 என குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் இன்னும் முடிவாகவில்லை. முதல் சுற்றுப்போட்டிகளின் முடிவில் சூப்பர் 12 பிரிவுக்கு தேர்வாகும் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். 

இந்தியா vs பாகிஸ்தான் அக்டோபர் 24, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vs நியூசிலாந்து அக்டோபர் 31, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vs ஆப்கானிஸ்தான் நவம்பர் 3, மாலை 6 மணி, அபு தாபி
இந்தியா vs பி1 நவம்பர் 5, மாலை 6 மணி, துபாய்
இந்தியா  vs ஏ2 நவம்பர் 8, மாலை 6 மணி, துபாய்

மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.