திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், கடந்த 8 ஆம் தேதி நூற்றுக்கணக்கான பொது மக்கள் அசைவ உணவு சாப்பிட்டு கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் தலைவலி, மயக்கம், காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களில், ஆரணி நகரம் லட்சுமி நகரில் வசித்த ஆனந்தன் மகள் லோஷினி (10) என்பவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். ஆனந்தன் (40), அவரது மனைவி பிரியதர்ஷிணி (32),  அவர்களுடைய மகன் சரண் (12) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



அதனைத்தொடர்ந்து , நேற்று புதியதாக 11 நபர்கள் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 8 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இன்று புதியதாக  10 நபர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மொத்தமாக  40 நபர்கள் பாதிக்கப்பட்டு ஆரணி, போளூர் மற்றும் வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணையில், உயிரிழந்த  சிறுமி மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் ‘தந்தூரி சிக்கன்’ மற்றும் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பிரியாணி கடையின் உரிமையாளரான ஷரப் பஜாரில் வசிக்கும் காதர் பாஷா மகன் அம்ஜத் பாஷா (32), புலவன்பாடி கிராமத்தில் வசிக்கும் சமையலர் முனியாண்டி (35) ஆகியோரை கைது செய்து இவர்களுடைய மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அம்ஜத் பாஷாவுக்கு சொந்தமான 2 பிரியாணி கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.



உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் ஆரணியில் உள்ள உணவகங்களில் நேற்று சோதனை நடத்தினர். அப்போழுது சம்பந்தப்பட்ட பிரியாணிக் கடையின் உள்ள  குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த 15 கிலோ கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை கைப்பற்றினர் பின்னர் அதனை அழிக்கும் திரவத்தைக்கொண்டு உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர். இதேபோல், பல கடைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை, கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.


நான் யாரையும் குறை சொல்ல விரும்பலங்க.. - உதயநிதி | NEET | Udhayanidhi Stalin | Salem Student Death