டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீராங்கனையாக வலம் வந்தவர் செரினா வில்லியம்ஸ். குழந்தை பிறந்த பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். முதல் இரண்டு சுற்றில் அசத்தலான வெற்றி பெற்ற செரினா வில்லியம்ஸ் நேற்று அஜிலாவிடம் தோல்வியடைந்தார். 7-5. 6-7, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.


செரினா வில்லியம்ஸ் ஓய்வு


40 வயதான செரினா வில்லியம்ஸ் இந்த தோல்விக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மகளிர் டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




டென்னிஸ் உலகின் பலருக்கும் உத்வேகமாக இருந்த செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலே தோல்வியடைந்த பிறகு, யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடருக்கு பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாகவே, நடப்பு அமெரிக்க ஓபன் தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


மீண்டும் பரிசீலனை


இந்த சூழலில், நேற்றைய தோல்விக்கு பிறகு செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நேற்றைய போட்டி முடிவுக்கு பிறகு செரினா வில்லியம்சிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்வீர்களா? என்று கேட்டபோது, அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால், மறுபரிசீலனை செய்வேனா என எனக்குத் தெரியாது என்று கூறினார்.




செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். செரினா வில்லியம்ஸ் 6 முறை அமெரிக்க ஓபனை வென்றுள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தனது சகோதரியும், முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்சிற்கு நன்றி கூறினார். வீனஸ் வில்லியம்ஸ் இல்லாவிட்டால் நான் செரினாவாக இருந்திருக்க மாட்டேன். மிக்க நன்றி வீனஸ். நான் செரினா வில்லியம்சாக இருப்பதற்கு வீனஸ் வில்லியம்ஸ் மட்டுமே காரணம் என்று தனது சகோதரிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.


சாதனைகள்


தனது  சிறு வயது முதல் டென்னிஸ் ஆடி வரும் செரினா வில்லியம்ஸ் கடைசியாக 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். அதன்பிறகு, நான்கு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியும் அவரால் எந்த பட்டமும் பெற முடியவில்லை. சுமார் 27 வருடங்களாக டென்னிஸ் உலகில் பல சாதனைகளை புரிந்த செரினா வில்லியம்ஸ் மார்க்ரெட்டிற்கு பிறகு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : IPL 2023: ஐபிஎல் தொடரில் அடுத்த இலக்கு கோப்பைதான்... புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்த ஹைதராபாத்!


மேலும் படிக்க : 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 4 ஒலிம்பிக் பதக்கம்...டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் செரீனா!