கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர் அரவிந்த் லிம்பவலி. மகாதேவபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது தொகுதியில் வசித்து வருபவர் ருத்சகர்மேரி. இவர் சமூக செயற்பாட்டாளராக உள்ளார். இதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். 1971ம் ஆண்டு கட்டப்பட்ட இவருக்கு சொந்தமான கட்டிடத்தை பெங்களூர் மாநகராட்சி இடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. லிம்பவலி, அந்தப் பகுதிக்கு சென்றிருந்தார்.
அப்போது, அவரிடம் ருத்சகர்மேரி தனக்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்று தனது கட்டிடத்திற்கான ஆவணங்களை வைத்திருந்தார். அப்போது, எம்.எல்.ஏ.விடம் ஒரு நிமிடம் சார் என்று கூறுகிறார். ஆனால், எம்.எல்.ஏ. லிம்ப்வலி ருத்மேரி கையில் இருந்த ஆவணங்களை பிடுங்கினார். மேலும், அந்த பெண்ணுடன் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த காவல்துறையினரை அழைத்து ருத்மேரியை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : தடுப்பூசியால்தான் இறந்தார்.. ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை மனு! பில்கேட்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்!
இந்த சம்பவம் தொடர்பாக, ருத்சகமேரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதன்படி, எம்.எல்.ஏ. லிம்ப்வலி போலீசாரிடம் என்னை சிறையில் அடைக்குமாறு அறிவுறுத்தினார் என்றும் அவர் என்னிடம் உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா? மரியாதை தெரியாதா? என்றும் கூறியதுடன் என்னை காவல்நிலையத்தில் அமர வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. லிம்பவலியின் செயல்பாட்டிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டுராவ் மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : SL vs AFG : ஆப்கானிஸ்தானை பழிதீர்க்குமா இலங்கை..? சூப்பர் 4 சுற்றில் இன்று முதல் போட்டி...!
மேலும் படிக்க : PM YASASVI Scheme 2022: பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்..