திங்கள்கிழமையன்று செரீனா வில்லியம்ஸ் டென்னிஸிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் "மிக அதிகம்" என்றும் கூறினார். 


செரீனா வில்லியம்ஸ் சான் பிரான்சிஸ்கோவில் செரீனா வென்ச்சர்ஸை என்ற தனது முதலீட்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு பேசிய போது "நான் ஓய்வு பெறவில்லை," என கூறினார். "மீண்டும் களமிறங்குவதற்கான  வாய்ப்புகள் மிக அதிகம்."என தெரிவித்தார்.


41 வயதான செரீனா வில்லியம்ஸ், ஆகஸ்ட் மாதம் ஒரு கட்டுரையில் "டென்னிஸிலிருந்து விலகி வருவதாக" கூறினார், மேலும் யு.எஸ். ஓபனை தனது பிரியாவிடை நிகழ்வாக உறுதிப்படுத்தாத நிலையில், நியூயார்க்கில் நடந்த ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அவருக்கு ஆடம்பரமான வரவேற்புகள் வழங்கப்பட்டு, மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார்.


அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை என்றும் பல தோல்விகளை அடைந்தார் என்றும் கூறப்பட்டது.  


யு.எஸ். ஓபனுக்குப் பிறகு போட்டிக்குத் தயாராகாதது தனக்கு இயல்பாக இல்லை என்று கூறினார். மேலும் "நான் இன்னும் (ஓய்வு) பற்றி யோசிக்கவில்லை,"  என வில்லியம்ஸ் தெரிவித்தார். பல நாட்கள் எழுந்த்வுடன் டென்னிஸ் கோர்ட்டிற்கு செல்வது வழக்கம் எனவும், ஆனால் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு போட்டிக்காக விளையாடவில்லை – பயிற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் மாறுபட்ட உணர்வாகவும் இதுவரை தன் மொத்த வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற ஒரு நாள் இருந்தது இல்லை எனவும் தெரிவித்தார். 


Dhoni Entertainment : தமிழில் படம் தயாரிக்கும் தோனி என்டர்டெயின்மெண்ட்… மனைவி சாக்ஷியின் கதை! குழுவினர் யார்?


Watch video: ’ஒன்றாகவே தோற்றோம், தோல்விக்கு யாரும் காரணம் இல்லை’.. ட்ரெஸ்ஸிங் ரூமில் ஆறுதல் கூறிய பாபர்..!


Sundar Pichai: கிரிக்கெட் ரசிகர் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை.. நேற்றைய மேட்ச்தான் ஹாட் டாபிக்