இன்ஸ்டாகிராமில் விளையாட்டு வீராங்கனையான பிவி சிந்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டிக் டாக்கில் ஆரம்பித்த வீடியோ மோகம் தற்போது இன்ஸ்டா, பேஸ்புக், யூடியூப் ஷாட்ஸ் என அடுத்தக் கட்டத்திற்கு சென்று விட்டது. செல்லப்பிராணிகள் செய்யும் செல்ல சேட்டைகள், வைரல் ஹிட் அடித்த பாடல்களுக்கு டான்ஸ், பிராங்க் செய்து ஏமாற்றுவது,  எமோஷனலான தருணங்கள் என அனைத்தையும் வீடியோவாக மாற்றி சமூகவலைதளங்களில் பதிவேற்றி லைக்குக்காக காத்திருப்பது இன்று பெரும்பான்மையானோரின் பொழுதுபோக்காக மாறியுள்ளது.


Urvashii rautela | இந்த ட்ரெஸ் போட்டா ரூமே ஒளிரும்.. பள பள உடையில் ஊர்வசி..! அம்மாடியோவ் விலை!!


இந்த வீடியோக்களால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வெல் செட்டில் ஆனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பலதுறைகளில் பிரபலமானவர்களும் அவ்வப்போது வீடியோக்களை தங்கள்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விடுவது உண்டு. அவை சில சமயம் வைரல் ஹிட்டும் ஆகி விடும். அப்படித்தான் இங்கும் ஒரு பிரபலம் நடனம் ஆடிய வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஹிட் அடித்துள்ளது. யாரு அந்த பிரபலம் என்று கேட்கிறீர்களா.. அது வேறு யாரும் அல்ல நம்ம பிவி சிந்துதான். 


பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து  Love Nwantiti பாடலுக்கு ஸ்டெப்பு போட்டு வீடியோவை  இன்ஸ்டாவில் தட்டிவிட அவர் ஆடிய நடனம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி ஹிட்டாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 4 லட்சத்திற்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 






முன்னதாக, நேற்று முன் தினம் விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.