பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தை பெற்றவர் இவர்.


அதுமட்டுமின்றி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார்.




சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமான ஊர்வசி கடைசியாக விர்ஜின் பானுப்பிரியா என்ற படத்தில் நடித்தார். தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் ஊர்வசி, தமிழில் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருளுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் இவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் ஹிந்தியிலும் தயாராவது குறிப்பிடத்தக்கது.


 






ஊர்வசி ரவுட்டேலா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது ஷேர் செய்துள்ள ஃபோட்டோவும், வீடியோவும் வைரலாகியுள்ளது.


 






அந்தப் ஃபோட்டோவில் நீலம் மற்றும் சில்வர் கிறிஸ்டல் பதிக்கப்பட்ட பாடிகன் உடையை அணிந்திருக்கும் ஊர்வசி அதற்கு ஏற்றாற் போல் சாக்ஸ் மற்றும் மேக்கப்பையும் போட்டிருக்கிறார். ஊர்வசி ரவுட்டேலா அணிந்துள்ள இந்த ஒளிரும் பாடிகன் உடையின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் ஆகும். இந்த உடை எந்த அறையையும் ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண