பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது டேட்டிங் குறித்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். 


டேட்டிங் குறித்து பேசிய ராஷ்மிகா, “ வயது ஒரு பெரிய விஷயம் இல்லை. டேட்டிங் செய்யும் நபர் உங்களை நன்றாக உணரவைக்க வேண்டும். அவர் உங்களை மாற்ற முயற்சிக்க கூடாது. இங்கு எல்லாமே சின்ன சின்ன விஷயங்களை சார்ந்தே இருக்கிறது.” என்றார்.


மேலும் தனது பள்ளிக்கால டேட்டிங் அனுபவங்கள் குறித்து பேசிய ராஷ்மிகா, “ வீடுகள் ஒன்றை ஒன்று தொலைவில் இருக்கும். நீங்கள்தான் ஒரு பையனை தேடி கண்டு பிடிக்க வேண்டும். நான் கூர்க்கில் வசித்த போது, கூர்க் பையன்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எனது பெற்றோரிடம் கேட்டேன் கூர்க் பையன்கள் எங்கே போனார்கள் என்று.. நான் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் எனது டேட்டிங் எப்படி இருக்குமென்று.. 




ஒரு பையனை நீங்கள் பார்த்து டேட் செய்கிறீர்கள் என்றால், உங்களது நண்பர்கள் உங்களை கேலி கிண்டலுக்கு உள்ளாக்குவார்கள். உங்களையும் டேட் செய்பவரின் பெயரையும் இணைத்து பேசுவார்கள். ஆதலால் இது போன்ற எந்த கேள்களுக்கு என்னிடம் பதில் இல்லை. 


மேலும் சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை புரோபைல் போட்டோவாக வைப்பது பற்றி பேசிய ராஷ்மிகா, “ எனக்கு இது புரியவில்லை. நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதை ஏன் நீங்கள் உங்களின் புரொபைல் போட்டோவாக வைக்க வேண்டும். உங்களை பார்க்கும் நபர் உங்களை சந்திக்கும் உங்களது கட்டுக்கோப்பான உடல் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.” இவ்வாறு ராஷ்மிகா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 




பல படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஜ்னு படத்தில் அறிமுகமாகிறார். இது மட்டுமன்றி அமிதாப் பச்சன் நடிக்கும் குட் பாய் படத்திலும் நடிக்க இருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா படத்திலும் ராஷ்மிகா கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.