தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன்ஸ்:


ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 115வது போட்டியில் இன்று (பிப்ரவரி 11) தமிழ் தலைவாஸ் அணி, பலமிக்க  புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடைபெற்ற உ.பி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் இந்த போட்டியில் இன்று களமிறங்கியது.  கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக,  கடந்த பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40-31 என்ற கணக்கில் புனேரி பல்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.


 


இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி. அதன்படி தமிழ் தலைவாஸ் அணியில், நரேந்தர், ரோனக், ஆஷிஷ், அஜிங்க்யா பவார், முகமதுரேசா கபௌத்ரஹங்கி, அமீர்ஹோசைன் பஸ்தாமி, சாஹில் குலியா ஆகியோர் களம் இறங்கினார்கள். அதேபோல் புனேரி பல்டன்ஸ் அணியில் அஸ்லாம் இனாம்தார், அபினேஷ் நடராஜன்சங்கேத் சாவந்த், பங்கஜ் மோஹிதே, மோஹித் கோயத், கௌரவ் காத்ரி, முகமதுரேசா சியானே ஷட்லூயி ஆகியோர் களம் இறங்கினார்கள்.


ஆதிக்கம் செலுத்திய புனேரி புல்டன்:


புனேரி பல்டன் அணி வீரர் அஸ்லாம் இனாம்தார் முதல் ரெய்டு சென்றார்.  அமீர்ஹோசைன் பஸ்தாமியை அகற்றி அஸ்லாம் ஒரு புள்ளியைப் புனே அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.  மோஹித் கோயத் ஒரு போனஸைப் பெற்றார், அதன் பிறகு சங்கேத் சாவந்த் அஜிங்க்யாவை மிட்லைனுக்கு மிக அருகில் இருந்து வெளியேற்றினார்பங்கஜ் மோஹிதே தடுத்து நிறுத்தப்பட்டார், ஆனால் மிட்லைனைத் தாண்டி கையை வைக்கப் போராடினார். புனே பல்டன்ஸ் அணியின் வலுவான ரெய்டுகள் மூலம் முதல் மூன்று நிமிடங்களில் 6 புள்ளிகளை பெற்றது. அதுவரையிலும் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளிகளை கூட எடுக்கவில்லை.


இதனிடையே தமிழ் தலைவாஸ் அணி ஆல்-அவுட் ஆனது. இதனால் புனேரி பல்டன் அணி 11 புள்ளிகளை பெற்றது. புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ்க்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. முதல் 10 நிமிடங்கள் முடிந்த போதபுனேரி அணி 15 புள்ளுகளும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளும் எடுத்திருந்தன.


பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி:


தமிழ் தலைவாஸ் அணி 9 புள்ளிகள் எடுத்த போது கௌரவ் காத்ரி, அஜிங்க்யா பவாரை வீழ்த்துவதற்கு அவரைத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி பத்து நிமிடத்தில் 46 புள்ளிகளை புனேரி அணியும் 18 புள்ளிகள் மட்டுமே எ தமிழ் தலைவாஸ் அணியும் எடுத்தது. இவ்வாறாக ஆட்டநேர முடிவில் புனேரி பல்டன் அணி 56 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் பெற்றன. அதன்படி, 27 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது புனேரி பல்டன் அணி.


 


மேலும் படிக்க: Sourav Ganguly: அச்சச்சோ.. காணாமல்போன கங்குலியின் செல்போன்.. எல்லா ரகசியமும் அதுலதான் இருக்காம்!


 


மேலும் படிக்க: India vs England Test: ஜஸ்ப்ரித் பும்ராவின் ‘பூம்பால்’தான் உண்மையான மேட்ச் வின்னர் - அஸ்வின்!