கொல்கத்தாவில் வசிக்கும் கங்குலி:


இந்திய கிர்க்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட் ஆகியோருக்கு கிரிக்கெட் உலகில் இருக்கும் அதே ரசிகர் பட்டாளம் கங்குலிக்கும் உண்டு. இவரது ஸ்டைல் மற்றும் எதிரணி வீரர்களை கையாலும் விதம் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. அண்மையில் பிசிசிஐயின் தலைவராக செயல்பட்ட இவர் தற்போது பயிற்சியாளராக இருக்கிறார். அதேபோல், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய தொழில் மற்றும் குடும்பத்தினருடன் அதிகம் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் தன்னுடைய சொந்த ஊரான கொல்கத்தாவில்தான் கங்குலி அதிகம் இருப்பார்.


திருடப்பட்ட செல்போன்:


இந்நிலையில் தான் பெஹாலா பகுதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து தன்னுடைய செல்போன் திருடப்பட்டுள்ளதாக கங்குலி தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்அவர் அளித்துள்ள புகார் மனுவில், “திருடப்படுவதற்கு முன்பாக வீட்டில் உள்ள ரகசிய பகுதியில் தான் செல்போன் வைக்கப்பட்டது. பணிகள் காரணமாக செல்போனை வைத்து சென்றுவிட்டு மீண்டும் வந்த பார்த்த போது திருடப்பட்டுள்ளது. வீட்டில் ஏற்கனவே பெயிண்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மர வேலைகளும் நடக்கிறது. அதேபோல் திருடப்பட்ட  செல்போனின் மதிப்பு ரூ.1.6 லட்சம் ரூபாய். இரண்டு 5ஜி சிம் கார்ட் ஆகியவையும் செல்போனில் இருந்தது.


நான் கடைசியாக ஜனவரி 19 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செல்போனை பார்த்தேன். காணாமல் போன பின்னர் எப்படியும் செல்போனை கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது செல்போன் தொலைந்ததில் இருந்து ஆழ்ந்த கவலையில் இருக்கிறேன். ஏனெனில், எனது செல்போனில் பல்வேறு நட்சத்திரங்களின் தொடர்பு எண்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.


அதனால் அந்த ரகசியங்கள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு முன் செல்போனை மீட்டு தர வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார் கங்குலி.  இதனிடையே திருடுபோன செல்போனை விரைவில் கண்டுபிடிப்பதற்கான வேலைகளை காவல்துறை செய்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: U19 WC Final: உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா? பிட்ச் ரிப்போர்ட், முக்கிய ப்ளேயர்கள் - முழு விவரம்


மேலும் படிக்க: Rohit Sharma: மார்க் பவுச்சருக்கு பதிலடி கொடுத்த ஹிட்மேன் மனைவி! நெகிழ்ச்சியில் உறைந்த ரோகித்சர்மா!