மதுரை சக்கிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கனையான ரேவதி வீரமணி. குழந்தையாக இருந்தபோது  பெற்றோர் உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்த நிலையில் பாட்டியின் வளர்ப்பில் இருந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரேவதி 2 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்துவந்துள்ளார் 12 ஆம் வகுப்பு பயின்றபோது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற நிலையில்  அதனை பார்த்த பயிற்சியாளர். அளித்த ஊக்கத்தாலும்,  நிதி உதவியாரும். நல்ல பயிற்சி, உணவு மற்றும்  தங்குமிடம் கொடுத்தார்.

 

இதை சற்று கவனிக்கவும் -  *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


அவரது உதவியுடன், மேலும் மதுரை லேடி டாக் கல்லூரியில் படித்து பயிற்சியை தொடர்ந்தார். இதையடுத்து  ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பின்னர் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்றுள்ளார். இதற்கிடையில் மதுரை தெற்கு ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. தொடர்ந்து விளையாட்டுத்துறையில் பயிற்சி பெற்றுவரும் ரேவதி சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் பங்கேற்றார். இதனால் ரேவதிக்கு பாராட்டு மழை குவிந்துவருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.



விளையாட்டுத்துறை, சாரண, சாரணியர், கலைத்துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி வழங்கப்படுகிறது. அதுபோல விளையாட்டுத்துறையில் தடகளத்தில் சாதனை புரிந்த  மதுரையை சேர்ந்த வீரமணி ரேவதிக்கு மதுரை  ரயில்வே கோட்டத்தில் கமர்ஷியல் கிளார்க் பணி வழங்கப்பட்டது. அவர் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் பங்கேற்று இருப்பதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய விகிதம் மூன்றாம் நிலையில் இருந்து ஆறாம் நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள பணி அவர் விளையாட்டுத்துறை பயிற்சிகளை மேற்கொள்ள உதவிகரமாக அமையும். பதவி உயர்வு பெற்ற வீரமணி ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலைகோட்ட ஊழியர் நல அதிகாரி ச.சுதாகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.