கவிஞர் வாலிக்கு அடுத்தபடியாக பேசப்பட வேண்டியவர் புலமைப்பித்தன். அருமையான பாடல்களை் இவர் எழுதி இருந்தாலும் கண்ணதாசன், வாலியை போல்  மக்களிடையே இவரை போன்றவர்கள் வாசம் பெறவில்லை. 
அந்த காலத்தில் இலங்கை தமிழ் வானொலியில் இருந்து பாடல்கள் ஒலிபரப்பப்படும்போது கவிஞர்கள் பெயர்களையும் குறிப்பிடுவார்கள். அதில் புலமை பித்தனின் பெயரும் அடிக்கடி வரும்.  
எம்ஜிஆருக்கு  குடியிருந்த கோவில் படத்தில் எழுதிய   "நான் யார்... நான் யார்... நீ யார்?." பாடல் மிகவும் புகழ்


பெற்றவை ஆகும்.



அது மட்டுமின்றி வார்த்தைகளில் வாலியை போல் விளையாடி இருப்பார். இந்த பாடல் உருவான இடமே  ஒரு பெட்டிக்கடையில் தான் என்று புலமை பித்தனே சொல்லி உள்ளார். 
சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடி சென்னை வந்த போது  ஒரு பெட்டிக்கடையில் நின்று இருந்தார். " நான் யாரு.. எங்கேயோ  பிறந்து இங்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மனிதர்கள் யாரு?" என்றெல்லாம் மனதில் கேள்விகளை எழுப்பியதோடு அங்கேயே பாடல்களை எழுதியவர்.  எம்ஜிஆருக்கு பல பாடல்கள் எழுதிய புலமைப்பித்தன் சிவாஜிக்கு பாடல் எழுதவில்லையே என்ற குறை இருந்திருக்கிறது. காரணம் அவர் சிவாஜியின் தீவிர ரசிகராம். ஒரு பேட்டியில் அவரே இதை சொன்னார். அவரது குறை சிவகாமியின் செல்வன் படத்தின் மூலம் தீர்ந்தது. இந்த படத்தில் இவர் எழுதிய 
  "இனியவளே... என்று பாடி வந்தேன்... இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்" என்ற டூயட்  பாடலை எழுதி இருந்தார். ஆராதானா இந்தி  படத்தை தழுவி தமிழில் எடுத்த படம் தான் சிவகாமியின் செல்வன். இந்தி படத்தில் ராஜேஷ் கன்னாவும், சர்மிளா தாகூரும் இணைந்து பாடிய    "கோரகா  ஏ மென்னு மேரா "  என்ற மென்மையான பாடல் போல் சிவகாமியின் செல்வன் படத்தில் சிவாஜியும், வாணிஸ்ரீயும் இணைந்து பாடி அசத்தி இருப்பார்கள்.



பாடலின் கடைசி சரணத்தில் " இதழால் உடல் அளந்தான்.. அவளோ தன்னை மறந்தாள் "  என்ற வரி சென்சாரில் எப்படியோ தப்பி விட்டதை புலமை பித்தன் அடிக்கடி நினைவு கூர்வார். அவரது நினைவையும் இப்போது நாம் போற்றுவோம்....!


-தன்ராஜ், ஊடகவியலாளர், மதுரை.