புரோ கபடி போட்டி:


10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 


இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. 2 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதன்படி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.


தென்மாவட்ட வெள்ளம்:


முன்னதாக, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது. இதில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது.



இந்த நிலையில் தான் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசான முத்து லட்சுமணன் கடந்த ஆண்டு தான் சம்பாதித்த ரூ.31.6 லட்சத்தை தூத்துக்குடி மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் அவர்களது வீடுகளை சீரமைக்க நன்கொடையாக வழங்க உள்ளேன் என்று கூறியாதக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன.


இச்சூழலில், தான் சம்பாதித்த ரூ.31.6 லட்சத்தை தூத்துக்குடி மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அளிப்பதாக கூறியது போன்ற செய்தி பரவி வருவதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் அது வதந்தி என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... முகமது ஷமியின் நிலை என்ன? விவரம் உள்ளே!


 


 


மேலும் படிக்க: Cheteshwar Pujara: ரஞ்சி கோப்பை... இரட்டை சதம்! வெறியாட்டம் ஆடிய புஜாரா...சுப்மன் கில் இடத்துக்கு ஆப்பு!