Cheteshwar Pujara: ரஞ்சி கோப்பை... இரட்டை சதம்! வெறியாட்டம் ஆடிய புஜாரா...சுப்மன் கில் இடத்துக்கு ஆப்பு!

ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் விளாசியிருக்கிறார் புஜாரா.

Continues below advertisement

டெஸ்ட் கிரிக்கெட்:

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Continues below advertisement

முன்னதாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருந்தவர் புஜாரா. விராட் கோலி அணியில் இருந்த போதும் கூட, மற்ற அணி வீரர்கள் புஜாராவின் விக்கெட்டை எதிர்நோக்கும் வகையில் ஒரு ஜாம்பவான் டெஸ்ட் வீரராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது கூட, புஜாராதான் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்ற போது, “கடந்தமுறை புஜாராவை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தமுறை அவருக்காக தனி பிளான் வைத்திருக்கிறோம்” என தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார்.

வாய்ப்பு வழங்கப்படவில்லை:

அந்தவகையில் ஒரு திறமையான வீரராக இருந்தவரை, 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணியிலிருந்து வெளியேற்றியது நிர்வாகம். இதன் பின்னர் எந்த சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்களை அதிருப்தி அடையைச் செய்தது.

சுப்மன் கில் இடத்துக்கு ஆப்பு:

இதனிடையே கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில்,சௌராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா நேற்று சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், இன்று இரட்டை சதம் விளாசியிருக்கிறார். அதன்படி 243 ரன்கள் குவித்துள்ளார்.  இச்சூழலில் தான் டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் சுப்மன் கில்லின் வாய்ப்பை புஜாராவிற்கு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் இந்திய அணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

மேலும் படிக்க: India vs South africa test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... இந்திய மண்ணில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

 

மேலும் படிக்க: Ranji Trophy: டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா? ரஞ்சி கோப்பையில் செய்த சம்பவம்! விவரம் இதோ!

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola