நாள்: 09.01.2024 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும்.  மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.


ரிஷபம்


துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். செலவு நிறைந்த நாள்.


மிதுனம்


உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.


கடகம்


உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.


சிம்மம்


தாய் வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.


கன்னி


மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். தாமதம் விலகும் நாள்.


துலாம்


தடைபட்ட சில காரியங்களில் முடிவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


விருச்சிகம்:


குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.  தியானம் மூலம் மன அமைதி ஏற்படும். திட்டமிட்ட பயணங்களில் காலதாமதம் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.  


தனுசு


தொழிலில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வழியில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


மகரம்


குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உண்டாகும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக அமையும். சந்தோஷம் நிறைந்த நாள்.


கும்பம்


குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலம் குறையும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்சிகள் கைகூடும். துன்பம் குறையும் நாள்.


மீனம்


பணவரவு தாமதாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.