ப்ரோ கபடி:
கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ப்ரோ கபடி லீக் போட்டிகள் நேற்று (டிசம்பர் 2) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 38 - 31 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதேபோல், இரண்டாவது போட்டியில் யு மும்பா மற்றும் யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த யு மும்பா அணி 34 - 31 என்ற கணக்கில் யு.பி. யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி அடைந்தது. இதன்மூலம், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் முதல் நாள் நடைபெற்ற போட்டியிலேயே தங்கள பயணத்தை வெற்றிக்கணக்குடன் தொடங்கியுள்ளது.
வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ்:
இந்நிலையில், தான் தமிழ்நாடு ரசிகர்களின் பேவரைட் அணியான தமிழ் தலைவாஸ் இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியை 42- 31 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அஜின்கியா பவர் 14 ரைடு, 2 Tackle , 5 போனஸ் புள்ளிகளுடன் 21 புள்ளிகள் எடுத்தார். நரேந்தர் ஹாஷியர் 8 புள்ளிகளும், அபிஷேக், ஹம்மன்சூ, ஷாஹில் சிங், ஆகியோர் தலா 2 புள்ளிகள் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் தங்களது பயணத்தை இந்த லீக் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் தலைவாஸ்:
Raid points: 27
Super raids : 2
Tackle points: 10
All out points: 4
Extra points: 1
தபாங் டெல்லி:
Raid points: 24
Super raids : 1
Tackle points: 5
All out points: 0
Extra points: 2
மேலும் படிக்க: IND Vs AUS, Innings Highlights: ஸ்ரேயஸ் ஐயர் அரைசதத்தால் தப்பிய இந்தியா; ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு
மேலும் படிக்க: Ruturaj Gaikwad: சர்வதேச டி20 போட்டி...ஒரு சீரிஸில் அதிக ரன்கள்...கோலியின் சாதனையை நெருங்கும் ருதுராஜ் கெய்க்வாட்!