சர்வதேச டி 20 போட்டிகளில் ஒரு சீரிஸில் அதிக ரன்களை குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


இந்தியா - ஆஸ்திரேலியா:


ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. அதன்படி, 5 டி20 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இது வரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


முன்னதாக,  கடந்த நவம்பர் 24-ஆம் தேதி  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.


அதேபோல், நவம்பர் 26 ஆம் தேதி  நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தோல்வியை தழுவிய இந்திய அணி நான்கவது போட்டியில் வெற்றி பெற்றது.


கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது இந்திய அணி. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.


ருதுராஜ் சாதனை:



இந்நிலையில் தான் இன்று (டிசம்பர் 3) பெங்களூரு சின்னசாமி மைதனத்தில் நடைபெற்று வரும் 5 வது டி 20 போட்டியில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகிறது.


இந்த போட்டியில் தான் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சாதனை படைத்துள்ளார்.


அதன்படி, சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சீசனில் அதிக ரன்கள்(223) குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ருதுராஜ். முன்னதாக, இந்த பட்டியலில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி  (2021-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக )  231 ரன்களுடன் முதல் இடத்திலும், கே.எல்.ராகுல் (2020-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக) 224 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் (ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023) 223 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல், விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் 8 ரன்கள் மட்டுமே தேவைபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, கடந்த 3 வது போட்டியில் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட்.


மேலும் படிக்க: Irfan Pathan: ”இது நம்ம கலாச்சாரம் கிடையாது... ஒரு பயிற்சியாளர், ஒரு கேப்டன்தான் நல்லது” - இர்பான் பதான் அதிரடி!


மேலும் படிக்க: IND vs SA Tour: தென்னாப்பிரிக்க வீரர்களை பும்ரா மிரளவைப்பார்- எச்சரிக்கும் ஏபி டி வில்லியர்ஸ்!