'Sack the ECB and Save Test cricket (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கலைத்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்) என குறிப்பிடப்பட்டு உள்ள பதாகையுடன் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் லீட்ஸ் மைதானத்தின் மேல் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


லீட்சில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது மைதானத்தை நோக்கி இருந்த பார்வையாளர்களின் தலைகள், திடீரென வானத்தை நோக்கி திரும்பின. அதற்கு காரணம், லீட்ஸ் மைதானத்தின் மீது பறந்து சென்ற சிறிய ரக விமானமும், அதில் பறந்த கொடியும்தான். அந்த பதாகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கலைத்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் என்ற அர்த்தம் Sack the ECB and Save Test cricket என்ற ஆங்கில வரி பொறிக்கப்பட்டு இருந்தது.






இதுகுறித்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுநர்கள், ”இந்த பேனர் மூலம், என்ன கருத்தை அவர்கள் சொல்ல வருகிறார்கள் என உணர முடியவில்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டில் திரும்பி இல்லாதவர்கள் இதுபோல் செய்திருக்கலாம். ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறாதது, உள்நாட்டில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் தோல்வி அடைந்து 1-0 என பின் தங்கியதால் அதிருப்தியில் உள்ளவர்கள் இதுபோல் செய்திருக்கலாம்” என்கின்றனர்.


இந்தியா – இங்கிலாந்து வீரர்களின் அணல் பறக்கும் ஆட்டத்தை கடந்து, இந்திய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் வைத்தே விமர்சித்தது, சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை வீசியது, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் இந்திய ஜெர்சியுடன் நுழைந்தது என இந்த தொடரில் விளையாட்டை தாண்டி தினந்தோறும் பரபரப்பு சம்பங்கள் அரங்கேறி வருகின்றன.


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், டார்ட்சில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், தற்போது லீட்ஸில் இந்தியா இங்கிலாந்து அணிகள் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.


முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை சேர்த்து உள்ளது. ரோகித் சர்மா 58 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ள நிலையில், புஜாரா 91 ரன்களுடனும், விராட் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!