காபூல் விமானநிலையத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கப் படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ்., கொரசான் அமைப்புக்கு எதிராகத் தற்போது ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட அந்த அமைப்பின் முக்கியத் தலைவரைக் கொலை செய்வதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகனில் இருந்து வரும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆஃப்கானின் நங்கஹார் மாகாணத்தில் இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட நபர் பதுங்கியிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் திட்டமிட்ட நபர் உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் பலி எண்ணிக்கை எதுவும் இல்லை எனவும் அங்கிருந்து வரும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இரட்டைத் தாக்குதலில் அமெரிக்கப்படையினர் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வன்முறையை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்றார். 


 






இதற்கிடையேதான் தற்போது ஐ.எஸ். அமைப்பை நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக , காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., தாக்குதலை தாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில் தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளது. 


அமெரிக்கப் படை வருகின்ற 31ந் தேதிக்குள் ஆஃப்கானிலிருந்து புறப்பட வேண்டும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த படை தற்போது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. வெடிகுண்டுச் சம்பவத்தை அடுத்து அமெரிக்கப் படைகளை விரைந்து புறப்படும்படி ஆஃப்கன் நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  










முன்னதாக, காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பலி எண்ணிக்கை 200 வரை உயர்ந்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு இரட்டை வெடிகுண்டுத் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியது. இதில் 13 மூன்று அமெரிக்க படையினர் மற்றும் பல ஆஃப்கான் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து வரும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஃப்கன் பத்திரிகையாளர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் காபூல் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள கால்வாயில் சடலங்கள் மிதப்பது பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்த பயங்கரத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அமெரிக்கர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களையும் தாக்கவே இந்த தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புதான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என முன்னதாக அமெரிக்கத் தரப்பும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம் தக்க பதிலடி தருவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள், காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு விபத்திற்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. காபூல் விமான நிலையத்திற்கு தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல நாட்டு விமானங்களும் வந்து செல்வதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் எச்சரித்திருந்தனர்.

Also Read: