ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் வீரரும் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்தி வீரருமான டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதிக்கு தயாராகி வருகிறார். இந்தச் சூழலில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்தப் பதிவில் இவர் விராட் கோலியுடன் இருக்கும் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவருடைய படத்தை சற்று மார்ஃபிங் செய்து குரங்கை போல் மாற்றியுள்ளார். 


இந்தப் பதிவில் அவர் எங்களுடைய அணிக்கு ஒரு புதிய வீரர் வந்துள்ளார். அவர் பெயர் ஏப்பி டிவில்லியர்ஸ் என்று பதிவிட்டுள்ளார். அதாவது குரங்கின் விளங்கின பெயர் ஏப்ஸ் என்பதால் அதை தன்னுடைய அவருடைய பெயரில் அவரே சேர்த்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை தற்போது வரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் லைக் செய்துள்ளனர். 






முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பாவிற்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை அணியில் சேர்த்துள்ளது. துஷ்மந்தா சாமீரா மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரையும் ஆர்சிபி அணியில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்த சைமேன் கேட்ச் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மைகே ஹேசன் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன்  புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது பாதியில் ஆர்சிபி அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 20-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


மேலும் படிக்க:யோக்கியன்னு நெனச்சா... இவ்வளவு பெரிய டூபாக்கூரா நீ... இங்கி., போர்டின் தில்லாலங்கடி அம்பலம்!