இந்தியா vs இங்கிலாந்து இடையே ஓல்ட் டிராப்ஃபோர்ட் மைதாணத்தில் இன்று தொடங்கி நடைப்பெறுவதாக இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டு பின்னர் அதில் மாற்றம் செய்துள்ளது.


இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் வெளியிட்ட அறிக்கை :




முதலில் பிசிசிஐ-யுடன் ஆலோசனை மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 5வது டெஸ்ட் ரத்து செய்யபடுவதாக அறிவித்து, மேற்க்கொண்டு அணிக்கு உள்ளே கொரொனா நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அச்சம் நிலவும் காரணத்தால் ”இந்தியாவால் அணியை களமிறக்க முடியவில்லை, அதற்கு பதிலாக போட்டியை இந்தியா இழக்க நேரிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்க, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை, தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது போன்ற பொருளை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இதற்க்கு பிசிசிஐ, இந்திய ரசிகர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க, அறிக்கையை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் அறிக்கையில் சில வார்த்தைகளை மாற்றியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.


இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மாற்றப்பட்ட அறிக்கை :




இந்தியாவால் அணியை களமிறக்க முடியவில்லை, அதற்கு பதிலாக போட்டியை இந்தியா இழக்க நேரிட்டது என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது “வருந்தத்தக்க வகையில் இந்தியாவால் ஒரு அணியை களமிறக்க முடியவில்லை” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா போட்டியை இழக்க நேரிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.