டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 24 வீரர்கள் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். அதில் அதிகபட்சமாக ஈட்டி எறிதல் பிரிவில் 7 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இன்று  ஆடவருக்கான எஃப்-57 பிரிவு ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் ரஞ்சித் பாட்டி பங்கேற்றார். 


இதில் தன்னுடைய முதல் முன்று முயற்சியிலும் ரஞ்சித் பாட்டி ஃபவுல் செய்தார். அதன்பின்னர் அடுத்த மூன்ற முயற்சியிலும் அவர் தொடர்ந்து ஃபவுல் செய்தார். இதனால் இறுதிப் போட்டியில் எந்தவித தூரமும் வீசாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.  ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாட்டி. இவர் 2017ஆம் ஆண்டு முதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் ஆர்வமாக இருந்து வந்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாரா சாம்பியன்ஷிப் மற்றும் மாநில பாராசாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் ரஞ்சித் பாட்டி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனால் டோக்கியோ பாராலிம்பிக் தொடரிலும் இவர் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய அனைத்து முயற்சியும் ஃபவுலாக அமைந்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.  


 






முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவருக்கான எஃப்-55 பிரிவு குண்டு எறிதலில் பங்கேற்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியை கொடியை ஏந்திச் சென்றவர் டேக் சந்த் பங்கேற்றார். இந்தப் போட்டியில்  தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 8.57 மீட்டர் தூரம் வீசினார். மூன்றாவது முயற்சியில் மீண்டும் ஃபவுல் செய்தார். அதன்பின்பு நான்காவது முயற்சியில் 9.04 மீட்டர் தூரம் வீசினார். இந்த ஆண்டில் அவர் வீசிய அதிகபட்ச தூரம் இதுவாகும்.


இதைத் தொடர்ந்து 5ஆவது மற்றும் 6ஆவது முயற்சியில் அவர் ஃபவுல் செய்தார். அதிகபட்சமாக 9.04 மீட்டர் தூரம் மட்டுமே அவர் வீசினார். இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஏனென்றால் பிரேசல் வீரர் சான்டோஸ் 12.63 மீட்டர் தூரம் வீசி இந்தப் பிரிவில் உலக சாதனை படைத்தார்.  அவருக்கு அடுத்து அசர்பைஜான்  மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த வீரர்களும் 11 மீட்டர் தூரத்திற்கு மேல் வீசியிருந்தனர். எனவே டேக் சந்த் இறுதியில் 8ஆவது இடத்தை பிடித்தார்.  


மேலும் படிக்க: தங்கமா... வெள்ளியா... பாராலிம்பிக் பைனலில் இந்தியா: வரலாறு படைத்த பவினாபென்!