டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, போட்டியை வென்று பதக்கத்தை தட்டிச் சென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு அணி பதக்கத்தை வென்றதை அடுத்து இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தது.


பல்வேறு தரப்பினரும் இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பரிசுகளையும், மரியாதையையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 10 பள்ளிகளுக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அம்ரித்சரில் உள்ள திமோவால் அரசு பள்ளி ஹர்மன்ப்ரீத் சிங் பெயரிலும், மிதாப்பூர் பள்ளி மன்ப்ரீத் சிங் பெயரிலும், ஃபரித்கோட் பள்ளி ரூபிந்தர் சிங் பெயரிலும், குர்டாஸ்பூர் மேல்நிலைப்பள்ளி சிம்ரன் ஜித் கவுர் பெயரிலும், கபர்தலா பள்ளி கிருஷ்ணன் ப்ரதக் பெயரிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.



இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. பெல்ஜியம் அணியுடனான அரை இறுதி போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. 






இந்திய ஹாக்கி அணிகள் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ ஒடிசா மாநிலம் முதலமைச்சர் நவீன்பட்நாயக் கொடுத்த நிதி காரணமாக இந்திய ஹாக்கி அணி ஈவுத்தொகையை பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாக்கி அணி, சர்வதேச ஃபோடியம்களை அலங்கரித்துள்ளது. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு பெருகுமானால், கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளும், விளையாட்டு வீரர்களுக்குமான தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். 


Sivasankar baba Impotency: அதே டெய்லர் அதே வாடகை... ‛ஆண்மை இல்லை’ அஸ்திரத்தை பயன்படுத்திய பாபாக்கள் லிஸ்ட் இதோ!