இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 51-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 46வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 19 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 17 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது. 


டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் விளையாட்டில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் பி.வி சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் அவர், அரை இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரை இறுதிப்போட்டியில் சீன தைபேவைச் சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீராங்கனையான தாய் சு-யிங்கை எதிர் கொள்ள உள்ளார். நாளை மதியம் 2.30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த போட்டி தவறாமல் பார்க்க வேண்டிய போட்டியாகும்.


PV Sindhu Medal Chance: ‛சில்வர்’ சிந்து... ’கோல்ட்’ சிந்துவாக இந்தியா திரும்புவாரா? அரை இறுதியில் என்ன நடக்கும்?


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்?


காலை 4 மணிக்கு - கோல்ஃப் - அனிர்பன் லஹிரி


காலை 5 மணிக்கு - குதிரையேற்றம் - ஃபவுத் மிர்சா


காலை 6 மணிக்கு - தட்டு எறிதல் - தகுதிச்சுற்று போட்டி - சீமா பூனியா


காலை 7.16 மணிக்கு - வில்வித்தை - ஆண்கள் தனிநபர் - அதானு தாஸ் vs டக்கஹரு ஃபுருக்காவா (ஜப்பான்)


காலை 7.25 மணிக்கு - தட்டு எறிதல் - கமல்ப்ரீத் கவுர்






காலை 7.30 மணிக்கு - குத்துச்சண்டை - அமித் பங்கல் vs யுபர்ஜென் ரிவாஸ் (கொலம்பியா)


காலை 8.30 மணிக்கு - துப்பாக்கிச் சுடுதல் - தேஜஸ்வினி சாவந்த் - அஞ்சும் மொட்கில்


காலை 8.35 மணிக்கு - பாய்மரப் படகுப்போட்டி - கே.சி கணபதி, வருண் தக்கர்


காலை 8.45 மணிக்கு - மகளிர் ஹாக்கி - இந்தியா vs தென் ஆப்ரிக்கா


மதியம் 2.30 மணிக்கு - பேட்மிண்டன் - அரை இறுதிப்போட்டி - பிவி சிந்து தாய் சு-யிங்


மதியம் 3.36 மணிக்கு - குத்துச்சண்டை - பூஜா ராணி vs லி குவின் (சீனா)


மதியம் 3.40 மணிக்கு - தடகளம் - நீளம் தாண்டுதல் - ஸ்ரீசங்கர்