✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Olympics Boxing: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை: லவ்லினா காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்

செல்வகுமார்   |  31 Jul 2024 05:48 PM (IST)

Olympics Boxing:  ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா

இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா 75 கிலோ எடை குத்துச் சண்டை பெண்கள், பிரிவில், நார்வே வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

காலிறுதிக்கு முன்னேறிய லவ்லினா:

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் பாரிஸ் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த தொடரில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 

இந்த நிலையில், ஒலிம்பிக் தொடரின் 5வது நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றையை காலிறுதி போட்டியில் நார்வே வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் லவில்னா

இவர் கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் , இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இந்தியர்களிடம் உள்ளது.

இதையடுத்து, அவரது அடுத்த வரக்கூடிய போட்டிகளானது எளிதானதாக இருக்கப்போவதில்லை, ஏனெனில் அவர், ஆகஸ்ட் 4 ஆம் தேதி கடைசி-எட்டு கட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சீன லி கியானை எதிர் கொள்ளவுள்ளார். இந்த போட்டியில் வென்றால், பதக்கம் உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 2 பதக்கங்கள்:

ஒலிம்பிக் போட்டியில் , இந்தியா இதுவரை 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

தனிநபர் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில், மனு பாக்கர் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இதுவரை இந்தியா 2 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 

Also Read: Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் ஜோடி அசத்தல்

Published at: 31 Jul 2024 04:45 PM (IST)
Tags: Olympics Boxing Lovlina Borgohain lovlina
  • முகப்பு
  • விளையாட்டு
  • ஒலிம்பிக்
  • Olympics Boxing: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை: லவ்லினா காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.