பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான்.


ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியவிற்கு தங்கம் வென்று கொடுக்க வாய்ப்புள்ள வீரர் தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:


தங்கம் வெல்ல வாய்ப்பு:


பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதன் முதலில் கடந்த 1992 ஆம் ஆண்டு கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் அறிமுகமானது. அதன்படி ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக இந்தியாவில் ஐந்து பிரிவுகளில் நான்கு பிரிவுகளில் ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.


இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்) தலைமையிலான அணியில் எச்.எஸ்.பிரணாய் மற்றும் லக்ஷ்யா சென் (ஆண்கள் ஒற்றையர்), சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி (ஆண்கள் இரட்டையர்), அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ (பெண்கள் இரட்டையர்) ஆகியோர் உள்ளனர்.


இந்தியாவின் சமீபத்திய சாதனைகளுக்கு ஒரு முக்கிய காரணம் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தான். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தாமஸ் கோப்பையில் இரட்டையர்கள் பிரிவில் கலந்து கொண்ட இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். BWF World Championships-ல்  Super 100 முதல்  Super 1000 வரை சிறப்பாக விளையாடியது இந்த ஜோடி. உலக சாம்பியன்ஷிப் வெண்கலம், ஒரு ஆசிய கேம்ஸ் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம், மற்றும், அனைத்திலும் முதலிடம், உலகின் நம்பர் 1 தரவரிசை இப்படி பல்வேறு சாதனைகளை இந்த ஜோடி படைத்து வருவதால் இவர்கள் சார்பில் இந்தியவிற்கு ஒரு தங்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


மேலும் படிக்க: Prithviraj Tondaiman: துப்பாக்கி சுடுதல்.. தங்கம் வெல்ல காத்திருக்கும் தங்கமகன் பிருத்விராஜ் தொண்டைமான்! யார் இவர்?


மேலும் படிக்க: Sharath Kamal: ஒலிம்பிக்கில் ஐந்தாவது முறையாக களம் இறங்கும் சரத் கமல்! யார் இவர்?