பாரீஸ் ஒலிம்பிக் 2024:


33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கின. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கெடுத்துள்ளார்கள்.இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மொத்தம் 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.


இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஈட்டி எறிதல் பிரிவில் 12 வீரர்கள் மோதும் இறுதிப் போட்டி நாளை இரவு நடைபெற இருக்கிறது. இச்சூழலில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது குறித்து நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.


பரபரப்பாக இருக்கும்:






அதில்,"என்னுடன் விளையாடியவர்கள் அனைவரும் திறமையானவர்கள். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மிகப்பெரியது. நிச்சயமாக இறுதிப் போட்டி மிக பரபரப்பாக இருக்கும். எனது மிகப்பெரிய உந்துதல் என்னவென்றால் நான் எப்போதும் என்னால் முடிந்த தூரம் செல்வேன். நான் இன்னும் உச்சத்தை எட்டவில்லை. என்னை நான் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Vinesh Phogat:போர் கண்ட சிங்கம்..ஆக்ரோஷமான வினேஷ் போகத்!


 


மேலும் படிக்க: Javelin Throw Final: இதான்யா போட்டி! நீரஜ் சோப்ராவுடன் பதக்கத்திற்கு மல்லுக்கட்டும் பாகிஸ்தான் வீரர்!