ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வவரும் சூழலில், இன்று குத்துசண்டை போட்டி நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஏஞ்சேலா காரினியும், அல்ஜீரியாவின் இமானே கேலிஃப்பும் மோதினர்.


மூக்கு உடைந்தது:


மகளிர் 66 கிலோகிராம் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டி தொடங்கியதும் அல்ஜீரிய வீராங்கனை இமானே கேலிஃப் இத்தாலி வீராங்கனை காரினி மீது சரமாரியாக குத்துக்களை விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை காரினியின் மூக்கு உடைந்தது. மூக்கு உடைந்ததும் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. மூக்கு உடைந்ததும் இத்தாலி வீராங்கனை நிலை தடுமாறினார். அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதனால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.






46 நொடிகளில் முடிவு:


ஆட்டம் தொடங்கிய 46 நொடிகளிலே முடிவுக்கு வந்ததால் அல்ஜீரிய வீராங்கனை இமானே கேலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற இமானே கேலிஃப் கடந்தாண்டு சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சிக்கியது அவரது வெற்றியை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. கடந்தாண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் பாலின பரிசோதனயில் தோல்வி அடைந்தவர். அவர் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது முதலே பெரும் விவாதமே ஏற்பட்டது.


இந்த சூழலில், பாலின சோதனையில் தோல்வி அடைந்த அல்ஜீரிய வீராங்கனை இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போட்டி முடிந்த பிறகு ஆட்டத்தின் நடுவர் வெற்றி யாருக்கு என்று அறிவிக்கும்போது இத்தாலிய வீராங்கனை அல்ஜீரிய வீராங்கனையுடன் கைகொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.


மேலும் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இத்தாலி வீராங்கனை காரினி ரிங் எனப்படும் வளையத்தின் உள்ளேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஒலிம்பிக் தொடரில் பாலின சோதனையில் தோல்வி அடைந்த வீராங்கனையால், போட்டியின்போது சக வீராங்கனையின் மூக்கு உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Paris Olympics 2024: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் - ஸ்வப்னில் குசலே அசத்தல்


மேலும் படிக்க: Olympics Boxing: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை: லவ்லினா காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்