நோவக் ஜோகோவிச் மற்றும் அவரது தந்தையைச் சுற்றியுள்ள அனைத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், மூத்த டென்னிஸ் நட்சத்திரம் போரிஸ் பெக்கர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடைபெறவிருக்கும் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் இடையேயான ஆஸ்திரேலிய ஓபன் இருதிப்போட்டி குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக பேசியுள்ளார்.
ஜோக்கோவிச் செய்யப்போகும் சாதனைகள்
இன்றைய போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால் ரஃபேல் நடாலின் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்குச் சமமாக ஜோக்கோவிச்சும் வெல்வார் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தனது பத்தாவது ஆஸ்திரேலிய ஓபன் கிரீடத்தை வெல்ல காத்திருக்கும் ஜோகோவிச் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. இதுகுறித்து பேசுகையில் அவரைப் போன்ற ஒரு வீரர் மீண்டும் வராமல் போக வாய்ப்பு இருப்பதால், அவர் விளையாடுவதை பார்ப்பதை மக்கள் அதிர்ஷ்டமாக உணர வேண்டும் என்று பெக்கர் கூறினார்.
சாதாரணமான விஷயம் அல்ல
"ஒரு டென்னிஸ் வீரர் மீண்டும் இதுபோன்ற ஒன்றைச் சாதிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை," என்று பெக்கர் கூறுகிறார். முன்னாள் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற பெக்கர், ஜோக்கோவிச்போன்ற ஒரு வீரர் அவ்வப்போது சாதிப்பதைப் பார்ப்பது பலருக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், அது அசாதாரணமான விஷயம், நாங்கள் இங்கே டென்னிஸ் வரலாற்றை நேரலையில் பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்: ஜோக்கோவிச், அதை செய்வார். ஆனால் பார்ப்பது போல, இது அவ்வளவு சாதாரணமானது அல்ல தோழர்களே," யூரோஸ்போர்ட்டுடன் பேசும் போது பெக்கர் மேலும் கூறினார்.
ஜோக்கோவிச்சிற்கு வயதாகிவிட்டது
ஜோகோவிச்சின் வயதைக் கருத்தில் கொண்டு, போட்டியின் போது ஜோக்கோவிச் மூச்சு வாங்குவதை பார்த்ததாக பெக்கர் கூறினார். அவர் விளையாடுவதைப் பார்த்து ரசிப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதால், அவர் எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது யாருக்கும் தெரியாது. "அவருக்கும் வயதாகிறது, அவருக்கு இப்போது 35 வயதாகிறது. வழக்கத்தை விட சற்று அதிகமாக மூச்சு வாங்குவதை ஆட்டத்தின்போது நாம் கவனிக்கலாம்", என்று பெக்கர் கூறினார்.
கடுமையான போட்டி அளிக்கும் சிட்சிபாஸ்
சிட்சிபாஸ் இந்த போட்டியை தனது சிறுவயது கனவை நிறைவேற்றுவதாக முன்னர் கூறியது போல், கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி வெற்றியாளராக இருப்பது பெரும் பெருமையாக கருதுவார் என்று பெக்கர் கருதுகிறார்.
"இது ஒரு ட்ரீம் இறுதிப்போட்டி! கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 தரவரிசையைப் பற்றியது, சிட்சிபாஸ் தனது குழந்தை பருவ கனவுகளை நிறைவேற்றுவதாக சிட்சிபாஸ் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஜோகோவிச் ஏற்கனவே உலகின் நம்பர் 1 ஆக இருக்கலாம், ஆனால் அவரையும் வெல்ல நினைக்கிறார் அவர். வென்றால் 22வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வாங்கி அவர் ரஃபேல் நடால் சாதனையை சமன் செய்ய முடியும்” என்று பெக்கர் மேலும் கூறினார்.