44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெண்கள் பிரிவில் கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, டானியா சச்தேவ் ஹரிகா துரோணவள்ளி மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்தியா ஏ அணிக்கு பிறகு இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஹரிகா துரோணவள்ளியும் பதக்கத்தை வென்றுள்ளார். முதல் குழந்தையுடன் கர்ப்பிணியாக இருக்கும் கிராண்ட்மாஸ்டர் ஹரிகா, ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நனவாக்கும் வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் பதக்கம் வென்ற வென்று வரலாறு படைத்திருக்கிறார். ஹரிகாவின் உறுதியும் அவரது குடும்பத்தினர் ஆதரவும், இந்த வெற்றியை அவருக்கு அளித்துள்ளன. 



ஹரிகா துரோணவள்ளி


இவர் சர்வதேச தர வரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கிறார். ஹரிகா தனது 10 ஆவது வயதிலேயே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். ஹரிகாவின் இந்த சாதனையை பாராட்டி, 2008ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது கிடைத்தது. இதையடுத்து 2012, 2015, 2017 ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: பாரதிராஜா எல்லா எடுபிடி வேலைகளையும் செய்தார்.. எங்க தெரியுமா? கமல் சொன்ன சீக்ரெட்


ட்விட்டர் பதிவு


தனது கணவர் மற்றும் தாயுடன் போட்டிக்கு சென்றிருந்த ஹரிகா, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றது குறித்து தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில், "13 வயதில் இந்திய பெண்கள் சதுரங்க அணியில் நான் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை 9 ஒலிம்பியாட் போட்டிகளில் விளையாடி உள்ளதால், இந்திய மகளிர் அணிக்காக மேடையில் இடம்பிடிக்க வேண்டும் என்று கனவு கண்டு, இறுதியாக இந்த முறை வெற்றி பெற்றேன். 9 மாத கர்ப்பிணியாக நான் இதனை செய்ததால் இது மிகவும் ஸ்பெஷல் ஆகிறது", என்று ஹரிகா எழுதி இருந்தார். 






மருத்துவர் ஆலோசனை கேட்டேன்


மேலும் பேசிய அவர், "இந்தியாவில் ஒலிம்பியாட் நடைபெறுவதைக் கேள்விப்பட்டபோதும் நான் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன், எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் விளையாட முடியும் என்று அவர் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது அப்போதிருந்து, என் வாழ்க்கை ஒலிம்பியாட் மற்றும் பதக்கம் வெல்வதைச் சுற்றியே இருந்தது. எனது ஒவ்வொரு அடியும் அதைச் சாத்தியப்படுத்துவதற்கான அடியாகவே இருந்தது. வளைகாப்பு நடத்தப்படவில்லை, பார்ட்டிகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை, பதக்கம் வென்ற பிறகுதான் எல்லாம் என்று முடிவு செய்தேன். நான் ஒவ்வொரு நாளும் உழைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில மாதங்களாக நான் இந்த தருணத்திற்காக தான் வாழ்ந்தேன். இன்று இந்திய பெண்கள் சதுரங்க அணிக்கான முதல் ஒலிம்பியாட் பதக்கம் கிடைத்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார். 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் பி அணி மற்றும் பெண்கள் இந்தியா ஏ அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.